பில் கேட்ஸ் மொத்த சொத்தையும் செலவிட 218 ஆண்டுகளாகும்...!

 
லண்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸின் சொத்துக்களை செலவு செய்து தீர்க்கவே 218 வருடங்கள் ஆகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்பாம் நிறுவனம் மேற்கொண்ட கேட்டாலே தலை சுற்ற வைக்கும் இந்த "காஸ்ட்லி" ஆய்வில் பல்வேறு செல்வந்தர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதன்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்தால் அவரது மொத்த சொத்து மதிப்பை தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது.