
சமீபத்தில் வெளியான ஓர் அறிக்கைப் படி சுவீடனில் 5 இல் 4 கொள்முதல்கள் (purchases) எலக்ட்ரானிக் முறையில் அல்லது பண அட்டைகள் மூலமாகவே மேற்கொள்ளப் பட்டு வருவதாகக் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் உலகில் பணப் பரிமாற்றத்தை அடியோடு மறக்கும் முதல் நாடாக மாறி வருகின்றது சுவீடன். சுவீடனில் ஒரு வருடத்துக்கு ஒரு நபர் சராசரியாக 260 தடவை எலக்ட்ரானிக் முறையில் இன்னொருவருக்கு பணத்தை செலுத்துகின்றனர்.
சமீபத்தில் சுவீடனில் Swish என்ற எலக்ட்ரானிக் முறையிலான பணம் செலுத்தும் app மாபைல் தொலைபேசிகளில் அறிமுகப் படுத்தப் பட்டது. அதாவது உலகில் தற்போது ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது போன்றே இந்த ஸ்மார்ட் ஃபோனில் உள்ள இப்புதிய Swish app மூலம் மாபைலினூடகவே பணப் பரிமாற்றம் செய்வதை பல சுவீடிஷ் மக்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இதனால் ATM போன்ற வங்கி சாதனங்கள் மூலம் பணம் பெறும் பழக்கத்தையும் சுவீடன் மக்கள் புறக்கணிக்கத் தொடங்கி விட்டனர். இதைவிட சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோல்மில் சிறியளவில் நாணயங்கள் செலுத்திப் பொருட்களை வாங்கும் கொள்முதல்களுக்குக் கூட வியாபாரிகள் எலக்ட்ரானிக் அட்டை மூலமான செலுத்துதலை அனுமதிக்கத் தொடங்கியதால் பணப்பரிமாற்ற முறை வேகமாக மறைந்து வருகின்றது.
இதேவேளை ஐரோப்பாவில் ஏனைய அனைத்து நாடுகளிலும் இதுவே நிலமை என்றில்லை. உதாரணமாக இத்தாலியில் இன்னமும் பணப்பரிமாற்றமே முக்கிய வழியாகப் பின்பற்றப் பட்டு வருகின்றது. அங்கு சராசரி நபர் மேற்கொள்ளும் 4 கொள்முதல்களில் 3 பணம் மூலமே செலுத்தப் படுகின்றது. இந்நிலையில் சுவீடனிலோ பணம் மூலம் பெறும் மொத்த வருமானம் அந்நாட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் GDP 0.3% வீதம் அதாவது வெறும் $1.2 பில்லியனே என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த மாற்றத்தால் சுவீடனில் இன்னுமொரு நண்மையும் விளைந்துள்ளது. அதாவது ஆயுதம் தாங்கிய கொள்ளைக் காரர்களுக்கு வங்கியில் கொள்ளையடிக்கப் பணம் இல்லாத சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் 2012 இல் வெறும் 5 வங்கிக் கொள்ளைகளே நிகழ்ந்துள்ளதாகவும் சுவீடனின் வங்கி வலையமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2030 ஆம் ஆண்டளவில் சுவீடனில் பணப் பரிமாற்றம் முற்றாக மறைந்து விடும் சூழ்நிலை இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.