நெல்லை: கோவில்பட்டியில் ஏடிஎம்மில் பணம் இல்லாத காரணத்தினால் வங்கிக்குள் புகுந்து மேலாளரை வாலிபர் ஒருவர் கோபத்துடன் அடித்து, உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர், கோவில்பட்டியில் பிரதான சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்றார். ஏ.டி.எம்மில் பணம் இல்லை என்று வந்ததும், கோபம் அடைந்தார்.

உடனே மேலாளர் அறைக்குச் சென்றார். அங்கிருந்த பொருள்களை உடைத்து, மேலாளரை அடிக்கத் தொடங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரைக் கட்டுப்படுத்தி வைத்தனர். பின்னர் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.