மேலூர் அருகே 4ம் வகுப்பு படித்த போலி பெண் மருத்துவர் கைது

மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி அம்பலகாரன்பட்டியில் 4-ம் வகுப்பு படித்தவர் ஆங்கில மருத்துவராக மருத்துவமனை நடத்திவருவதாக தகவலறிந்த போலீஸார், போலி பெண் மருத்துவரைக் கைது செய்தனர்.
தும்பைப்பட்டி அம்பலகாரன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி விசாலாட்சி (53) . இவரது வீட்டில் சிறிய அறையில் படுக்கை வசதியுடன் மருத்துவமனையை நீண்டகாலமாக நடத்தி வந்துள்ளார். அவர் போலி மருத்துவர் என மேலூர் போலீஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீஸார் விசாலாட்சி மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனர். அங்கு ஆங்கில மருத்துவமுறைக்கான ஊசிகள், மருந்துகள், மாத்திரைகள் இருந்ததை போலீஸார் கைப்பற்றினர். மேலும் அவரிசம் நடத்திய விசாரணையில் நான்காம் வகுப்பு படித்துள்ள அவர் சில மருத்துவமனைகளில் வேலைசெய்த அனுபவத்தைக் கொண்டு மருத்துவம் செய்துள்ளார்.
தும்பைப்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது. இருப்பினும் கிராமப்புற மக்களது அறியாமையைப் பயன்படுத்தி இந்த போலி மருத்துவர் மருத்துவமனையை நடத்திவந்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்