தமிழ்நாடு போலீஸ் தோளில் 'அசால்ட்'டாக கை போட்ட அர்னால்ட்!





சென்னை: தமிழ்நாட்டில் நடிகர்களை கடவுளைப் போல கொண்டாடுகின்றனர். ஒரு படத்தில் நடித்தால் கூட அவர்களுக்கு பந்தா தானாக குடியேறிவிடும்.
தமிழ்நாடு போலீஸ் தோளில் 'அசால்ட்'டாக கை போட்ட அர்னால்ட்!

ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில முன்னாள் ஆளுநருமான ஆர்னால்ட் ஸ்வாஸ்நேகர், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்குப் பின்னர் வெளியே வந்த அவர், புகைப்படக்காரர்களுக்கு அவர் சில நிமிடங்கள் போஸ் கொடுத்தார். ஜெயலலிதாவுடனான சந்திப்பு சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், தன்னை அழைத்து சென்ற பாதுகாப்பு அதிகாரியின் தோளில் கை போட்டு கொண்டு சகஜமாக போஸ் கொடுத்தார். அர்னால்டின் அணுகுமுறையைப் பார்த்த அந்த காவல்துறை அதிகாரிக்கு திடீரென இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.