சிலந்தியைக் கொல்லப் போய் வீட்டை எரித்த பெண்


 http://www.wired.com/images_blogs/wiredscience/2013/10/geekspider.jpg
மூட்டைப் பூச்சியைக் கொல்லப்போய் வீட்டை எரித்த கதை என்பார்கள். அதே போன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இங்கு ஒரு பெண் சிலந்தியைக் கொல்ல முயன்று வீட்டையே எரித்துள்ளார்.
நெஞ்சை உறைய வைக்கும் இந்த செயலைப் புரிந்தவர் அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கின்னி கிரிப்பித் (வயது 34)
சிலந்தி என்றாலே இவருக்கு பயமாம். இந்நிலையில் தனது வீட்டில் துணிகளுக்கிடையே சிலந்தி ஒன்று ஓடுவதைப் பார்த்துள்ளார். உடனே சிகரெட் லைட்டரைக் கொண்டு பற்ற வைத்துள்ளார். துணிகளில் பரவிய தீ மளமளவென முழுக்க பரவியது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். சிலந்திக்காக வீட்டை எரித்த அவரை போலீசார் கைது செய்தனர்.