''நான் அறிவுரை கூறினால் மட்டும், சிகரெட் பிடிப்பவர்கள் திருந்திவிடுவார்களா என்ன?


''சிகரெட் பிடிப்பவர்கள், அந்தப் பழக்கத்தை விட்டுவிடும் அளவுக்கு நல்ல அறிவுரை ஒன்று சொல்லுங்களேன்?''

''நான் அறிவுரை கூறினால் மட்டும், சிகரெட் பிடிப்பவர்கள் திருந்திவிடுவார்களா என்ன? ஆனால், அந்த சிகரெட்டில் என்னென்ன உள்ளன என்பதை மட்டும் சொல்கிறேன்... 



1. பற்றவைக்க உறைந்த நிலையில் திரவம்.
2. பேட்டரியில் பயன்படுத்தப்படும் கேட்மியம்.
3. உணவில் ருசியூட்டும் வினிகரில் உள்ள அசிடிக் அமிலம்.
4. சாக்கடையில் எழும் மீத்தேன் வாயு.
5. அர்செனிக் என்ற விஷம்.
6. நச்சான கார்பன் மோனோக்ஸைட்.
7. ராக்கெட் எரிபொருள் கலவைகளுள் ஒன்றான மெத்தனால்.
8. மெழுகுவத்தி தயாரிக்கப் பயன்படும் ஸ்டீரிக் ஆசிட்.
9. சிகரெட்டை, தொடர்ந்து எரியவைக்கும் ஹெக்சாமைன்.
10. ஆலைகளில் பயன்படும் கரைப்பான்.
11. பூச்சிக்கொல்லி ரசாயனமான நிகோட்டின்.
12. கழிப்பறையைச் சுத்திகரிக்கப் பயன்படும் அமோனியா.
13. வண்ணம் தரும் பெயின்ட்...

இவையெல்லாம் சேர்த்து செய்த உருளைதான் சிகரெட். இதைப் படித்த டென்ஷனில் சிகரெட் பற்றவைக்கத் தோணுகிறதா? மீண்டும் முதலில் இருந்து இந்தப் பட்டியலைப் படியுங்கள்!''