
நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி செய்த 3 வெளிநாட்டவர்களை அப்பகுதி போலீஸார் கைது செய்தனர்.
அவர்களில் 2 பேர் உஸ்பெகிஸ்தான் நகரை சேர்ந்த அப்துராசுல் ஜுராபோவ் (24) மற்றும் அப்ரோர் ஹபிபோவ் (30) என்று தெரியவந்தது. மேலும், எங்களை சிரியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என்று அதிகாரிகளை மிரட்டியுள்ளதாகவும் தெரியவந்தது. மற்றொருவர் அஹ்ரோர் சைதாக்மேதோவ் (19) கஜகஸ்தானை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வோம் என்று உறுதிமொழி, ஒரு இணையதளத்தில் உஸ்பெக் மொழியில் வெளியானதை தொடர்ந்து அதில் அவர்கள் போஸ்ட் செய்ததை கண்காணித்து அவர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.